மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
'அதெல்லாம் எனக்கு தெரியாது நீ போடு' - சீறிய பெண், திணறிய அமைச்சர்..!
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களிடம் பெண் ஒருவர் சாமியாடி சாலை வசதி வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
விழுப்புரம் : சுமார் 99.33 ரூபாய் மதிப்பிட்டில் செஞ்சி ஒன்றியத்துக்கு உட்குட்பட்ட ரெட்டிபாளையம் முதல் பெலாகுப்பம் வரை சாலை அமைப்பதற்க்கான பணி துவக்க நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாட்டின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள் கலந்துக் கொண்டார், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதே பகுதியை சேர்ந்த பழங்குடியினர் இனத்தைச் சந்திரா என்னும் பெண் திடீரென சாமி ஆடினார்.
சாமி ஆடி கொண்டிருந்த சந்திராவிடம் அமைச்சர் செஞ்சி மஸ்தான், யாருமா நீங்கள்? என்று கேட்டுள்ளார். அதற்க்கு அந்த பெண் கன்னிமார் என்று பதில் அளித்துள்ளார். பின் என்ன வேணும்? என்று கேட்க, ஊருக்கு ரோடு போட்டு தானு பதில் அளித்துள்ளார்.
அதற்க்கு அமைச்சர், ஒரு சிலர் ரோட்டை ஆக்கிரமிரமித்துள்ளன. அவர்கள் வழியை தந்தால் சாலை போட்டு தருகிறேன் என்று சொல்ல, அதெல்லாம் நீ பாத்துகோ ரோடு போட்டு தா என்று உரத்த குரலில் கூறிய பிறகு அமைச்சர் லட்டு கொடுத்து சாமியாடிய பெண்ணை சமாதானம் செய்துள்ளார்.
வித்தியாசமான முறையில் சாலை வசதி கேட்ட பெண்ணின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.