35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
தாம்பத்தியத்தின் போது, பெண்களுக்கு அந்த உறுப்பில் வலி ஏற்படுவது ஏன்?.. கணவர்களே உஷார்.!
திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் தங்களின் தாம்பத்திய வாழ்க்கையை தொடங்குவது இயல்பான ஒன்றே. தாம்பத்திய வாழ்க்கை தம்பதிகளிடையே நெருக்கத்தை அதிகரித்து, அவர்களை புரிந்துகொள்ளவும் உதவி செய்கிறது. இந்த நிகழ்வு தொடர்பான பல்வேறு சந்தேகங்கள் இன்றளவும் பலருக்கு உள்ளது. அவற்றில், பெண்களுக்கு ஏற்படும் வலி தொடர்பாக இன்று காணலாம்.
தாம்பத்தியத்தில் பெண்களுக்கு பெண்ணுறுப்பில் புணர்ச்சியின் போது வலி ஏற்படுவது இயற்கையான ஒன்று தான். ஆனால், சில பெண்களுக்கு அதிகளவு வலி இருந்தால், அது அவர்களின் தாம்பத்திய வாழ்க்கையில் வெறுப்பை ஏற்படுத்தும், பின்னாளில் அது இல்லற வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கும். மருத்துவ ரீதியாக பெண்ணுறுப்பில் தாம்பத்திய புணர்ச்சியின் போது வலியை உணர்வது Dysparunia என்று கூறப்படுகிறது.
இந்த தாம்பத்திய வலி 2 வகையாக பிரிக்கப்படுகிறது. 1) தாம்பத்தியத்தில் புணர்ச்சியின் தொடக்கத்திலேயே ஏற்படுவது Superficial Dysparunia என்றும், 2) தாம்பத்திய புணர்ச்சியில் பெண்களின் உச்சக்கட்டத்தின் போது ஏற்படுவது Deep Dysparunia என்று அழைக்கப்படுகிறது. பெண்ணுறுப்பில் தாம்பத்தியத்தின் போது வலி ஏற்படுவதற்கு நேர்த்தியற்ற பாலியல் உறவு காரணமாக அமைகிறது.
ஆண்களை பொறுத்த வரையில் தாம்பத்திய உணர்வு ஏற்பட்டு, ஆணுறுப்பு விறைப்படைகிறது. ஆண் குறியின் நுனியில் லேசான திரவம் சிறிதளவு சுரக்கும். ஆண்களுக்கு கலவிக்கான உணர்வு ஏற்பட்டு ஆணுறுப்பு விறைத்துவிட்டால், நேரடியாக தாம்பத்தியத்தை தொடங்கிவிடலாம் அதனால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், பெண்களுக்கு அப்படி கிடையாது.
பெண்களுக்கு தாம்பத்திய உணர்வு ஏற்பட்டு, அவர்களின் பெண் குறி விரிவடைந்தாலும் லேசான அளவு மட்டுமே துவரம் இருப்பது போல தோன்றும். பெண்ணுறுப்பின் பகுதியில் இயற்கையாக ஆணுறுப்பின் செலுத்துதல் போது ஏற்படும் உராய்வை குறைக்க திரவங்கள் சுரக்கும். இது பெண்களுக்கு தாம்பத்திய உணர்வு அதிகரித்தால் மட்டுமே ஏற்படும். பெண்ணுறுப்பில் உராய்வை குறைக்க திரவம் சுரக்காமல் இருந்தால், அது அதிகளவு வலியை பெண்களுக்கு ஏற்படுத்தும்.
தனது பெண் துணை உறவுக்கு தயாராகிவிட்டாளா? என்ற விஷயம் தெரியாமலேயே ஆண்கள் புணர்ச்சியை தொடங்கினால் அது பெண்களுக்கு வலியை மட்டுமே ஏற்படுத்தும். பெண்கள் தாம்பத்தியத்திற்கு தயாராக அவர்களை ஆண்கள் தயார்படுத்த வேண்டும். மனைவியுடன் அன்பாக பேசுதல், உணர்ச்சியை அதிகப்படுத்தும் விதமாக செல்ல சீண்டல்கள் செய்வது போன்றவற்றை முதலில் செய்ய வேண்டும். அதன்பின்னரே உடலுறவு புணர்ச்சியை தொடங்க வேண்டும்.
தாம்பத்தியத்திற்கு பெண்ணை தயார்படுத்தும் நிகழ்வை ஆங்கிலத்தில் Foreplay என்று கூறுவார்கள். தனது துணையை உணர்ச்சி பெருக்கால் தயார்படுத்தி தாம்பத்தியம் மேற்கொள்வதே சிறந்தது. அதுவே தம்பதிகளுக்குள் புரிதலை அதிகரிக்க உதவி செய்யும். எடுத்த எடுப்பில் டாப் கியரில் வண்டியை செலுத்தினால், அது என்றோ ஒருநாள் விரிசலைத்தான் ஏற்படுத்தும்.
பெண்ணுறுப்பில் திரவம் சுரக்க இயலாமல் போனதற்கான பிற காரணங்கள்:
மாதவிடாய் நாட்களில் பெண்ணுறுப்பில் ஏற்படும் உலர்தன்மை மற்றும் மாதவிலக்கு நிறைவடையும் 40 க்கும் மேற்பட்ட வயதில் இயற்கை மாற்றத்தினால் வலி ஏற்படும். பெண்ணுறுப்பில் ஏற்படும் நோய்தொற்று, உளவியல் காரணங்கள், சிறுநீர் வாயில் ஏற்படும் தொற்று, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு மனதளவில் வருத்தத்தில் இருத்தல் போன்றவற்றால் பெண் பயந்து இருப்பின் அவர்கள் தாம்பத்தியத்திற்கு தயாரானாலும், அவர்களின் மனது பயத்துடன் இருப்பதால் பெண்ணுறுப்பில் திரவம் சுரக்காது. பெண்ணுறுப்பின் அளவும் சற்று சுருங்கி இருக்கும். மனைவியின் மனதை புரிந்து கணவர் செயல்படுவது நல்லது.