மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கள்ளக்காதலனுடன் உல்லாசம்.! நடுராத்திரியில் ரத்தவெள்ளத்தில் மிதக்க, கர்ப்பிணி பெண்ணிற்கு நேர்ந்த அவலம்!!
மதுரை மாவட்டம் அருகே உள்ள வடிவேல்கரையில் வசித்து வந்தவர் வடிவேல்.இவரது மனைவி அம்சத். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அம்சத்துக்கு செக்கானூரணி அருகே உள்ள தேங்கல்பட்டியில் வசித்து வந்த மதன் என்ற ஆட்டோ டிரைவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறிய நிலையில், அம்சத் வடிவேல் மற்றும் தனது குழந்தைகளை பிரிந்து மதனுடன் சென்றுள்ளார். பின்னர் அவருடனே தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அம்சத் 4 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.
இதனால் வடிவேல் தனது மனைவி மீது கடும் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 11.30 மணிக்கு வடிவேலு உறவினருடன், அம்சத் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அம்சத் மற்றும் மதன் தூங்கி கொண்டிருந்த நிலையில் அவர்களை வடிவேல் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் அம்சத் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் வடிவேல் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
மேலும் இதில் காயமடைந்து இரத்த வெள்ளத்தில் மிதந்த மதன் அலறிய சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அங்கு விரைந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனை தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த வடிவேல் மற்றும் அவர் உறவினரை கண்டுபிடித்து அவர்களை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.