இந்த ஆண்டு உலகக்கோப்பை வெல்வது இந்த அணிதான்! இந்திய அணியின் பிரபல முன்னாள் வீரர் அதிர்ச்சி தகவல்!



2019 cricket world cup winner


ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்நிலையில் மே 30 ஆம் தேதி முதல் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது. போட்டியில் பங்கேற்கும் அணைத்து அணிகளும் உலகக்கோப்பையில் விளையாட உள்ள அணியினை அறிவித்துவருகின்றனர்.

இந்தநிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியலை தேர்வு குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் வெளியிட்டார். ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் இங்கிலாந்து அணிக்கு கோப்பையை வெல்ல நிறைய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

World cup 2019

இதுகுறித்து அவர் கூறுகையில், 2015ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் மோசமான தோல்வியை சந்தித்த பிறகு இங்கிலாந்து அணியின் விளையாட்டில், வீரர்களை தேர்வு செய்வதில் பல நல்ல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த இரண்டு முறையும் உலகக்கோப்பை தொடரை நடத்தும் அணி தான் கோப்பையை வென்றுள்ளது என முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.