தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
4 வது வெற்றி யாருக்கு..!! சம பலம் வாய்ந்த குஜராத்-ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்..!!
இன்று தொடங்கும் 23 வது லீக் போட்டியில், 4 வது வெற்றியை எதிர்நோக்கி குஜராத்-ராஜஸ்தான் அணிகள் களமிறங்குகின்றன.
கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 21 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கும் 22 வது லீக் போட்டியில், மும்பை-கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் 23 வது லீக் போட்டியில், 4 வது வெற்றியை எதிர்நோக்கி குஜராத்-ராஜஸ்தான் அணிகள் களமிறங்குகின்றன.
குஜராத் அணி இதுவரை 4 போட்டிகளில் பங்கேற்று சென்னை, டெல்லி, பஞ்சாப் அணிகளுக்கு எதிராக தலா 1 வெற்றியும், கொல்கத்தா அணியுடனான போட்டியில் 1 தோல்வியும் கண்டு 6 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் உள்ளது.
பேட்டிங்கில் விருத்திமான் சஹா, சுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர் மற்றும் ராகுல் திவாட்டியா வலு சேர்கின்றனர். பந்து வீச்சில் ரஷித் கான், அல்ஜாரி ஜோசப், முகமது ஷமி, ஜோஷ் லிட்டில் மற்றும் மொகித் ஷர்மா ஆகியோர் வலு சேர்க்கின்றனர்.
ராஜஸ்தான் அணி இதுவரை 4 போட்டிகளில் பங்க்கேற்று ஐதராபாத், டெல்லி, சென்னை அணிகளுக்கு எதிராக தலா 1 வெற்றியும், பஞ்சாப் அணிக்கு எதிராக 1 தோல்வியும் கண்டு 3 புள்ளிகள் பெற்றுள்ளது. ராஜஸ்தான் அணியின் பேட்டிங் வரிசை மற்றும் பந்துவீச்சாளர்கள் அந்த அணியின் பலமாக உள்ளது.
பேட்டிங்கை பொறுத்தவரை ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் மற்றும் சிம்ரன் ஹெட்மயர் பலம் சேர்க்கின்றனர். பந்து வீச்சில் யுவேந்திர சஹல், ரவிச்சந்திரன் அஸ்வின், டிரென்ட் பவுல்ட் உள்ளிட்டோர் அந்த அணிக்கு சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
இவ்விரு அணிகளும் 4 வது வெற்றிக்காக கடுமையாக மல்லுக்கட்டுவதால், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. உள்ளூர் மைதானத்தில் விளையாடுவது குஜராத் அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.