சேசிங்கில் அதிகபட்சம்: ஐ.பி.எல் வரலாற்றில் முதன் முறையாக கடைசி ஓவரில் 31 ரன்கள்..!!



31 runs in the last over for the first time in IPL history

கடந்த 2008 ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 12 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று மாலை 3.30 மணிக்கு ஆமதாபாத் மைதானத்தில் தொடங்கிய 13 ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. சாய் சுதர்ஷன் 53 (38) ரன்களும், விஜய் சங்கர் 63 (24) ஷர்துல் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசியதுடன் 20 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்புக்கு, 204 ரன்கள் குவித்தது.

இதனை தொடர்ந்து 205 ரன்கள் மெகா இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய குர்பாஸ்-ஜெகதீஸ் ஜோடி ஏமாற்றம் அளித்தது. இம்பாக்ட் வீரராக களமிறங்கிய வெங்கடேஷ் அய்யர் அதிரடியில் மிரட்ட, கேப்டன் ராணாவும் கோதாவில் குதிக்க கொல்கத்தா வேகமாக மீண்டு எழுந்தது.

17 வது ஓவர் வரை வெற்றிநடை போட்ட கொல்கத்தா அணிக்கு 18 வது ஓவரில் ரஷீத்கான் முட்டுக்கட்டை போட்டார். ஆந்த்ரே ரசூல், சுனில் நரேன், ஷர்துல் தாக்கூர் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

கடைசி 6 பந்துகளில் 29 ரன்கள் எடுக்கவேண்டிய நிர்பந்தத்தில் ரிங்கு சிங்-உமேஷ் யாதவ் ஜோடி களத்தில் இருந்தது. கடைசி ஓவரின் முதல் பந்தில் உமேஷ் யாதவ் சிங்கிள் எடுக்க அடுத்த 5 பந்துகளில் 5 சிக்ஸர்களை விளாசிய ரிங்கு சிங் கொல்கத்தா அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற வைத்தார்.

ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை சேசிங்கில், கடைசி ஓவரில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் ஆகும். கடந்த 2016 ஆம் ஆண்டில் பஞ்சாப் அணிக்கு எதிராக புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி கடைசி ஓவரில் 23 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதே இதுவரையில் அதிகபட்சமாக இருந்தது.