ஒரே போட்டியில் பல்வேறு சாதனைகளை முறியடித்த ஆப்கானிஸ்தான்; குவியும் பாராட்டுக்கள்!



afganisthan-made-4-records-in-one-match

சர்வதேச அரங்கில் ஆப்கானிஸ்தான் அணி தனக்கான அங்கீகாரத்தை ஒவ்வொன்றாக பெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று அயர்லாந்துடன் நடைபெற்ற டி20 போட்டிகள் பல்வேறு சாதனைகளை முறியடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி டேராடூனில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கன் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீர்ர்களாக ஹஸ்ரதுல்லாவும், உஸ்மான் கானியும் களம் புகுந்தனர்.

முதல் 10 ஓவர்களில் ஆப்கன் அணி விக்கெட் இழப்பின்றி 122 ரன்களை குவித்தது. 42 பந்துகளை சந்தித்த ஹஸ்ரபுல்லா சதம் அடித்து சாதனை படைத்தார். டி20 போட்டியில் குறைந்த பந்தில் சதம் அடித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை படைத்தார். ஆப்கனின் ரன்வேட்டை தொடர்ந்த நிலையில் 17.3-வது ஓவரில் 238 ரன்கள் எடுத்திருந்தபோது முதல் விக்கெட்டாக உஸ்மான் கானி அவுட் ஆனார். 48 பந்துகளை சந்தித்த அவர், 3 சிக்ஸர்களுடன் 73 ரன்களை எடுத்தார். டி20 போட்டியில் முதல் விக்கெட் ஜோடிக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் இதுவே ஆகும்.

cricket

தொடர்ந்து ஆடிய ஹஸ்ரதுல்லா 62 பந்துகளில் 16 சிக்ஸர், 11 நான்கு உதவியுடன் 162 ரன்களை குவித்தார். தனிப்பட்ட வீர்ர் ஒருவர் 20 ஓவர் போட்டியில் அடித்த இரண்டாவது அதிகபட்ச ரன் இதுவாகும். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆப்கன் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 278 ரன்களை குவித்தது. சர்வதேச டி20 போட்டிகளில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் இதுவேயாகும். ஒரே போட்டியில் 4 சாதனைகளை தகர்த்த ஆப்கனுக்கு ஐசிசி வாழ்த்துக் கூறியுள்ளது.

ஒருநாள் போட்டியில் அதிகபட்சமாக ஒரு அணி எடுத்த ரன் (278), அதிகபட்ச பார்ட்னர்ஷிப் (236 ரன்கள்), ஒரு பேட்ஸ்மேன் டி20-ல் அடித்த அதிக சிக்ஸர்களின் எண்ணிக்கை (16 சிக்ஸர்கள்), டி20 போட்டியில் ஒரு பேட்ஸ்மேனின் இரண்டாவது அதிகபட்ச ரன் (162 நாட் அவுட்), குறைந்த பந்தில் சதமடித்த மூன்றாவது வீரர் உள்ளிட்ட சாதனைகளை ஆப்கானிஸ்தான் அணி ஒரே போட்டியில் பதிவு செய்துள்ளது.

அடுத்ததாக தனது இன்னிங்சை தொடங்கிய அயர்லாந்து 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.