மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாகிஸ்தான் அணியை தூக்கி சாப்பிட்ட ஆப்கானிஸ்தான் அணி! தலை தொங்கிய பாக்கிஸ்தான்!
உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்த மாதம் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இப்போட்டியில் 10 அணிகள் பங்கேற்கிறது. இதனால் இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ள வீரர்கள் இங்கிலாந்து சென்றுள்ளனர்.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 10 அணிகளும், பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் விளையாடியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.
பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்களாக இமாம்-உல்-ஹக், பகர் ஜமான் ஆகியோர் களமிறங்கினர். பாகிஸ்தான் அணியின் பாபர் ஆஸம் 108 பந்துகளில் 112 ரன்களும், சோயிப் மாலிக் 44 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 47.5 ஓவரில் 262 ரன்கள் எடுத்து அணைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து ஆட்டமிழந்தது. ஆப்கான் தரப்பில் முகமது நபி 3 விக்கெட்டும் ரஷித்கான், தவ்லத் ஸத்ரன் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.
263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 49.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 263 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் முகமது ஷாசத் 23 ரன்களில் தசைப்பிடிப்பு காரணமாக வெளியேறினார்.
அந்த அணியின் ஹஸ்ரத்துல்லா ஸஸாய் 49 ரன்னும் முகமது நபி 34 ரன்னும் எடுத்தனர். அதிரடி வீரர் ஷாகிதி 74 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். ஆப்கனிஸ்தான் அணி இறுதி ஓவரின் நான்காவது பந்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. பாகிஸ்தான் அணியின் வகாப் ரியாஸ் 3 விக்கெட்டும், இமாத் வாசிம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.