ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
பாகிஸ்தான் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த விராட் கோலி.! ஆத்தாடி... நம்ம ஊர்லயே இப்டி இல்லையே..!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் பாகிஸ்தானிலும் தனி ரசிகர் கூட்டாமே உருவாக்கி வருகிறது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி குரூப் 2-ல் இடம் பெற்றுள்ளது. இந்த குரூப்பில் பாகிஸ்தான், நெதர்லாந்து அணி மட்டுமே 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இந்திய அணி 2 போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற முக்கிய வீரராக விராட் கோலி செயல்பட்டார். குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் ஆடிய விதம் மிகச்சிறப்பாக இருந்தது. இந்தநிலையில் விராட் கோலிக்கு உலக அளவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாக்கி உள்ளது.
A fan of Virat Kohli @imVkohli, from Balochistan made this amazing portray of #ViratKohli𓃵 using sand art to show his love for the greatest cricketer of our time. pic.twitter.com/GlHvI7ALwA
— Fazila Baloch🌺☀️ (@IFazilaBaloch) October 28, 2022
இந்த நிலையில் பாகிஸ்தானில் பலுசிஸ்தான் நகரில் விராட் கோலியின் ஓவியம் வரையப்பட்டுள்ளது. விராட் கோலியின் தீவிர ரசிகரான கடானி என்பவர் ஓவியத்தை வரைந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.