#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
போட்டியின் நடுவே நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அஸ்வின்.. என்ன நடந்தது?? வைரல் வீடியோ இதோ..
இந்தியா - நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது இந்திய வீரர் அஸ்வின் அம்பயருடன் வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 345 ரன்கள் எடுத்தது.
அடுத்ததாக களமிறங்கிய நியூசிலாந்து அணி 296 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அக்ஷர் படேல் 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும், ஜடேஜா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். தற்போது இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடிவருகிறது.
இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது இந்திய வீரர் அஸ்வின் போட்டியின் நடுவருடன் வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுவருகிறது. அஸ்வின் பந்து வீச வரும்போது வித்தியாசமாக நான்ஸ்ட்ரைக்கர் எண்டில் உள்ள ஸ்ம்புக்கு நேராக வந்து பந்து வீசினார்.
அஸ்வின் இப்படி பந்து வீசுவதால் அம்பயருக்கு LBW பார்ப்பதில் சிக்கல் எழுந்ததாக தெரிகிறது. மேலும் பேட்ஸ்மேன் அடிக்கும் பந்தை தடுப்பதற்காக அஸ்வின் நான்ஸ்ட்ரைக்கர் திசையை நோக்கி ஓடினார். அஸ்வின் இதுபோன்று செய்தது நான்ஸ்ட்ரைக்கரை தொந்தரவு செய்யும் வகையில் இருப்தாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை அடுத்து அஸ்வினை அழைத்த போட்டியின் நடுவர், இப்படி செய்யாதீர்கள் என அஸ்வினிடம் கூற, நான் விதிகளின்படியே பந்து வீசுவதாகவும், எந்த ஒரு விதி மீறலும் செய்யவில்லை எனவும் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
Ashwin argues with umpire Nitin Menon pic.twitter.com/R5qMxyeDi0
— Sunaina Gosh (@Sunainagosh7) November 27, 2021