திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"பந்து வீசுறியா இல்ல பவுலரை மாத்தவா" ஒரே வரியில் குல்தீப்பின் வாயடைத்த டோனி. வைரலாகும் வீடியோ உள்ளே!!
ஆசியக் கோப்பைத் தொடர் தற்போது துபாயில் நடைபெற்று கொண்டிருக்கிறது நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில், இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் மோதின. இதில்,இறுதிப் போட்டிக்கு இந்திய அணி ஏற்கனவே தகுதி பெற்றிருந்ததால் இந்தப் போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மா, தவான், பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஆகவே முன்னாள் கேப்டன் தோனி, அன்று இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து, டாஸ் வென்று, முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய முகமது சேஷாத் 124 ரன்களும், அவருக்குப் பின் வந்த முகமது நபி 64 ரன்களும் குவித்தனர்.
இதைத் தொடர்ந்து, 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய அம்பதி ராயுடு 57 ரன்களுக்கும், ராகுல் 60 ரன்களுக்கும் வெளியேற, அவர்களையடுத்து வந்த கேப்டன் தோனி 8 ரன்களில், நடுவரின் தவறான முடிவால் எல்பிடபுள் ஆனார்.
தொடர்ந்து வந்த வீரர்களும் சொதப்ப, நிலைத்து நின்று ஆடிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 44 ரன்களில் இருந்த போது, நடுவரின் மற்றொரு தவறான முடிவால் எல்பிடபுள்யு ஆனார். இதன் பிறகு வந்த வீரர்கள் யாரும் நிலைத்து நின்று விளையாடாததால் முடிவில் இந்தியா 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் ஆட்டம் டையில் முடிந்தது.
"Bowling karega ya bowler change karein" MS Dhoni to Kuldeep Yadav pic.twitter.com/Sb7mKOporI
— Khurram Siddiquee (@iamkhurrum12) September 25, 2018
இந்நிலையில், இந்திய அணி பந்துவீச்சின் போது, சுழற்பந்து வீச்சாளர் குல்தீப், பந்து வீசி கொண்டிருந்தார். இந்நிலையில் கேப்டன் தோனி நிறுத்திய பீல்ட் செட்டிங்கை விரும்பாததால் , தோனியிடம் பீல்டிங் செட்டிங்கை மாற்றுமாறு குல்தீப் சற்று அப்செட்டாக சொல்லியுள்ளார். உடனே தோனி, பீல்டிங்கை மாற்றமால் மாறாக குல்தீப்பிடம், பந்து வீசுறியா இல்ல பவுலர மாத்தவா என ஒரே வரியில் பதில் சொல்லி அவரை அப்படியே ஆப் செய்திருந்தார். பதில் பேசாமல் வாயை மூடிக்கொண்டு, குல்தீப் பந்துவீசி சென்றார். தற்போது அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.