மார்ஷ், மாக்ஸ்வெல் அதிரடி! இந்திய அணிக்கு இமாலய ரன் இலக்கு
அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்துள்ளது. ஷான் மார்ஷ் அபாரமாக ஆடி சதமடித்தார்.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் கலீல் அஹமது நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக முகமது சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த ஆட்டம் இவருக்கு முதல் சர்வதேச ஒருநாள் போட்டியாகும்.
துவக்க ஆட்டக்காரர்கள் பின்ச் மற்றும் கேரி இருவரும் நிதானமாக ஆட்டத்தை துவங்கினர். புவனேஷ்வர் மற்றும் சமி சிறப்பாக பந்து வீசினர். ஆட்டத்தின் 7வது ஓவரில் பின்ச் 6, 8 வது ஓவரில் கேரி 18 ரன்கள் எடுத்து புவனேஷ்வர் மற்றும் சமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்து ஆட்டத்தை அதிரடியாக ஆரம்பித்த கவாஜா 21 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டானார்.
அதனைத் தொடர்ந்து வந்த ஷான் மார்ஷ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த ஹ்ன்ஸ்கோம்ப் மற்றும் ஸ்டாயின்ஸ் 20, 29 ரன்கள் முறையே எடுத்து ஆட்டமிழந்தனர். அப்போது ஆஸ்திரேலியா அணி 37 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்திருந்தது.
பின்னர் மார்ஷுடன் மாக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மார்ஷ் 7வது ஒருநாள் சதத்தை கடந்தார். அதனையடுத்து இருவரும் பவுண்டரிகளும், சிக்சருமாக விளாசத் துவங்கினர். அறிமுக வீரர் சிராஜ் பந்தில் மாக்ஸ்வேல் அமபயரால் எல்பிடபுல்யூ கொடுக்கப்பட்டார், ஆனால் DRS மூலம் அவுட் இல்லை என கூறப்பட்டது. மேலும் மீண்டும் சிராஜின் அடுத்த ஓவரில் மாக்ஸ்வேல் கொடுத்த கேட்சை ரோகித் சர்மா தவறவிட்டார். சிராஜ் சர்வதேச ஒருநாள் போட்டியில் முதல் விக்கெட்டை இழக்க முடியவில்லை.
அதிரடியாக ஆடிய மாக்ஸ்வேல் 48 ஆவது ஓவரில் 48 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஷ்வர் பந்தில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் 131 ரன்கள் எடுத்து ஷான் மார்ஷ் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரிச்சட்சன் 2, சிடில் 0 எடுத்து ஆட்டமிழந்தனர்.
கடைசியில் 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் சார்பில் புவனேஷ்வர் 4, சமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்த இலக்கை இந்திய அணி எடுத்து தொடரை சமன் செய்யுமா எனபதை பொருத்திருந்து பார்ப்போம்.