திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விராட் கோலி இல்லாத 2வது டெஸ்ட்.! கெத்து காட்டிய இளம் வீரர்கள்.! தடுமாறும் ஆஸ்திரேலியா.!
இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது நடைபெறும் 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்களாக ஜோ பர்ன்ஸ் மற்றும் மேத்யூ வேட் களமிறங்கினர்.
இந்திய அணியின் பும்ரா ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் ஜோ பர்ன்ஸை டக் அவுட் ஆக்கினார். அவரைத்தொடர்ந்து மேத்யூ வேட் 30 ரன்கள் எடுத்தநிலையில் அஸ்வின் ஓவரில் அவுட் ஆனார்., இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஸ்டீவன் சுமித்தை டக் அவுட் ஆக்கினார் அஸ்வின்.
இதனையடுத்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 38 ரன்களும், மர்னஸ் 48 ரன்களும் எடுத்து வெளியேறினர். அவர்களைத்தொடர்ந்து கேமரான் கீரின் 12 ரன்களும், டிம் பெய்ன் 13 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதற்கு அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் 72.3 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 195 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும், தமிழக வீரர் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.