மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெறித்தனமாக ஆடிய ஆஸ்திரேலியா.. இந்திய அணிக்கு இமாலய இலக்கு!
இந்திய ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று ஆஸ்திரேலியாவின் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய வார்னர் மற்றும் பின்ச் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். முதல் விக்கெட்டிற்கு இருவரும் இணைந்து 156 ரன்கள் விளாசினர். 69 ரன்கள் எடுத்த வார்னர் சமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ஸ்மித் இந்திய அணியின் பந்துவீச்சை அடித்து துவம்சம் செய்தார். பின்ச் 114 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த ஸ்டாய்னிஸ் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார்.
அடுத்து களமிறங்கிய மேக்வெல் மின்னல் வேகத்தில் விளையாடி 19 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒருபுறம் அதிரடியாக ஆடிய ஸ்மித் 66 பந்துகளில் 105 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.
50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் எடுத்துள்ளது. இந்த இமாலய இலக்கை இந்திய அணியால் தொட முடியுமா என்ற ஏக்கம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.