#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தொடங்கியது இரண்டாவது ஒருநாள் போட்டி; தொடரை சமன் செய்யுமா இந்திய அணி!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களை சிறப்பாக ஆடியது. இந்நிலையில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் சிட்னியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தில் இந்தியாவின் ரோகித் சர்மா சிறப்பாக ஆடி சதம் அடித்தார்.
இதைத்தொடர்ந்து அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் இன்று இத் தொடரின் இரண்டாவது ஆட்டம் நடைபெறுகிறது இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த இந்திய அணி இந்த ஆட்டத்தில் நிச்சயம் வென்றே தீர வேண்டும். இல்லையெனில், இந்திய அணி தொடரை இழந்து விடும் என்ற இக்கட்டான சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே இந்த ஆட்டம் அனைவராலும் அதிகம் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆட்டத்தை விட இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேகப்பந்துவீச்சாளர் கலீல் அஹமது நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக முகமது சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த ஆட்டம் இவருக்கு முதல் சர்வதேச ஒருநாள் போட்டியாகும்.