தங்கியது கூடாரத்தில்..! விற்றது பாணி பூரி..! இன்று உலகையையே திரும்பி பார்க்க வைத்த இளம் கிரிக்கெட் வீரர்..!



background-of-yashasvi-jaiswal-highest-run-scorer-in-u1

தென்னாபிரிக்காவில் நடைபெற்றுவரும் 19 வயத்துக்குட்பட்டோருக்கான உலக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் யஸாஸ்வி ஜெய்ஷ்வால் சதமடித்து அசத்தினார். மேலும் இந்த தொடரில் இதுவரை அதிக ரன்கள் எடுத்துள்ளவர் இவரே. 

உத்தர பிரதேசம் மாநிலம், பாடோகி என்ற ஊரில் பாணி பூரி விற்பவரின் மகன் தன இந்த ஜெய்ஷ்வால். சிறுவயதில் இருந்தே கிரிக்கெட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். தற்போது 18 வயது நிரம்பிய ஜெய்ஷ்வால் 7 வருடங்களுக்கு (11 வயது) முன்பே கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்வதற்காக பெற்றோர் சம்மதத்துடன் மும்பைக்கு வந்துள்ளார். ஆரம்பத்தில் ஒரு சிறிய கடையில் வேலைபார்த்துக்கொண்டு அங்கேயே தங்கியுள்ளார். ஆனால் சில நாட்களில் அவரை அங்கிருந்து வெளியேற கூறிவிட்டனர்.

நாள் முழுதும் மும்பை அசாத் மெய்டன் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட ஜெய்ஷ்வால், அந்த மைதானத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கியிருந்த கூடாரத்தில் தங்கியுள்ளார். அப்பா அனுப்பும் சிறிய தொகையை கொண்டு 3 வேலை சாப்பிடமுடியாத ஜெய்ஷ்வால் பலநாட்கள் பசியுடன் தான் தூங்கியுள்ளார். மேலும் தனது செலவுக்காக ராம் லீலா திருவிழாவின் போது மும்பை வீதிகளில் அவரே பாணி பூரியும் விற்றுள்ளார். அதில் கிடைக்கும் தொகையை வைத்து தான் விளையாடுவதற்கு தேவையான பொருட்களை வாங்கியுள்ளார்.

yashasvi jaiswal

இடது கை பேட்டிங் மற்றும் வலது கை சுழற்பந்துவீச்சாளரான ஜெய்ஷ்வாலின் கனவு இந்திய அணிக்காக விளையாடவேண்டுமென்பதே. அந்த கனவிற்காக பசியை மறந்து எப்போதும் ரன், விக்கெட் என்ற கனவிலேயே வாழ்த்துள்ளார். பின்னர் மும்பை பயிற்சியாளர் ஜுவாலா சிங்க் என்பவரின் உதவியுடன் படிப்படியாக முன்னேற துவங்கினார்.

17 வயதில் முதல்முறையாக இலங்கைக்கு எதிரான தொடரில் 19 வயத்துக்குட்பட்டோருக்கான தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்தார் ஜெய்ஷ்வால். தற்போது 19 வயத்துக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்துள்ள இவர் இதுவரை (59, 29*, 57*, 62, 105*) ரன்கள் குவித்து இந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 315 ரன்கள், சராசரி 156. 

yashasvi jaiswal

சிறுவயதில் இருந்தே பல போராட்டங்களை சந்தித்த ஜெய்ஷ்வால், "என் சொந்த வாழ்க்கையில் பல மன அழுத்தங்களை நான் பார்த்துவிட்டதால், கிரிக்கெட்டில் இருக்கும் மன அழுத்தத்தை பற்றி கவலைகொள்வதில்லை. இவை எனக்கு நல்ல பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது. என்னால் ரன்கள் மற்றும் விக்கெட்டுகள் எடுக்க முடியும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது; ஆனால் அடுத்த வேலை சாப்டு கிடைக்குமா என்ற கவலை மட்டும் தீரவில்லை" என்று கூறியுள்ளார். இவரை 2020 ஐபில் தொடருக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2.4 கோடிக்கு எடுத்துள்ளது.