மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிஸியான பிசிசிஐ.. உலகக்கோப்பைக்கு முன்னதாக ஓய்வே இல்லை.. அடுத்தடுத்து நடைபெறும் தொடர்களின் புதிய அட்டவணை..!
சமீபத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாடி வரும் இந்திய அணி அடுத்ததாக ஆகஸ்ட் 18ல் துவங்கவுள்ள ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் செப்டம்பர் 11 வரை ஆசியக் கோப்பை டி20 தொடரில் விளையாடுகிறது.
அதன்பின்னர் அக்டோபர் 15ஆம் தேதி துவங்க உள்ள டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. இந்நிலையில் உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக உள்ள இடைப்பட்ட காலத்தில் இந்திய அணி வலுவான இரண்டு அணிகளுடன் மோத உள்ளது.
இதில் முதலாவதாக இந்தியா வரவுள்ள ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகளிலும் அதன் பின்னர் இந்தியாவிற்கு வரவுள்ள தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த இரண்டு தொடர்களுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
Take a look at #TeamIndia's home series fixture against Australia. 👍#INDvAUS pic.twitter.com/zwNuDtF32R
— BCCI (@BCCI) August 3, 2022
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டிகள் செப்டம்பர் 20, 23, 25 ஆகிய தேதிகளிலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டிகள் செப்டம்பர் 28, அக்டோபர் 2 மற்றும் 4ஆம் தேதிகளிலும் ஒருநாள் போட்டிகள் அக்டோபர் 6, 9, 11 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
Check out the #INDvSA home series schedule. 👌#TeamIndia | @BCCI | @OfficialCSA pic.twitter.com/jo8zC4hjDq
— BCCI (@BCCI) August 3, 2022