தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்த பட்டியல் வெளியானது.! ஆத்தாடி... வீரர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா.?
இந்திய கிரிக்கெட் வாரியம் ஒவ்வொரு ஆண்டும் வருடாந்திர வீரர்கள் ஒப்பந்த பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு 2021ம் ஆண்டுக்கான ஒப்பந்த பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. அதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய மூவர் மட்டும் ஏ+ கிரேடு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
பிசிசிஐ-ன் ஒப்பந்த பட்டியல் என்பது 4 ஊதிய அமைப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் A+ பிரிவில் இடம்பெறும் வீரர்கள் ரூ.7 கோடியும், A பிரிவில் இடம்பெறும் வீரர்கள் 5 கோடி ரூபாயும், B பிரிவில் இடம்பெறும் வீரர்கள் 3 கோடி ரூபாயும், C பிரிவில் இடம்பெறும் வீரர்கள் ஒரு கோடி ரூபாயும் ஊதியமாக பெறுவார்கள்.
ALERT🚨: BCCI announces annual player retainership 2020-21 - #TeamIndia (Senior Men) for the period from October 2020 to September 2021.
— BCCI (@BCCI) April 15, 2021
Payment structure:
Grade A+ : INR 7 Cr
Grade A : INR 5 Cr
Grade B : INR 3 Cr
Grade C : INR 1 Crhttps://t.co/WgtmO7pIOv pic.twitter.com/ycnPcXPYJu
A+ கிரேடு வீரர்கள்:
* விராட் கோலி
* ரோகித் சர்மா
* ஜஸ்பிரித் பும்ரா
A கிரேடு வீரர்கள்:
* ரவிச்சந்திரன்
* ரவீந்திர ஜடேஜா
* சட்டேஸ்வர் புஜாரா
* அஜிங்கியா ரகானே
* ஷிகர் தவான்
* கே.எல்.ராகுல்
* முகமது ஷமி
* இஷாந்த் சர்மா
* ரிஷப் பந்த்
* ஹர்திக் பாண்டியா
B கிரேடு வீரர்கள்:
* விர்திமன் சாஹா
* உமேஷ் யாதவ்
* புவனேஸ்வர் குமார்
* ஷர்துல் தாக்கூர்
* மயங்க் அகர்வால்
C கிரேடு வீரர்கள்:
* குல்தீப் யாதவ்
* நவ்தீப் சைனி
* தீபக் சாஹர்
* சுப்மன் கில்
* ஹனுமா விஹாரி
* அக்ஸர் பட்டேல்
* ஸ்ரேயாஸ் ஐயர்
* வாஷிங்டன் சுந்தர்
* யுவேந்திர சாஹல்
*முகமது சிராஜ்