மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இங்கிலாந்திற்கு எதிரான ஆட்டத்தில் அதிரடி மாற்றமா! பிசிசிஐ அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி
வரும் ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்திற்கு எதிராக ஆடப்போகும் இந்திய அணியின் புதிய சீருடையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
கடந்த ஒரு மக மாதகாலமாக நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் இதுவரை 6 போட்டிகளில் ஆடியுள்ள இந்திய அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டி மட்டும் மழையால் ரத்து செய்யப்பட்டது.
இந்த உலகக் கோப்பை தொடரில் கலந்து கொண்டுள்ள 10 அணிகளில் இதுவரை எந்த போட்டியிலும் தோல்வி பெறாத ஒரே அணி இந்தியா மட்டுமே. இந்நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா இங்கிலாந்துடன் மோதுகின்றது. இந்த உலகக் கோப்பையில் ஒரே நிறத்திலான சீருடை கொண்ட அணிகள் மோதும் பொழுது ஒரு அணி வேறு நிறத்திலான சீருடை அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் மோதும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஊதா நிறத்திலான சீருடையை கொண்டவை. எனவே இந்த போட்டியின் போது இந்திய அணி வேறு ஒரு நிறத்திலான சீருடை அணியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிசிசிஐ இந்திய அணிக்கான புதிய சீருடையையும் அறிமுகம் செய்துள்ளது. ஆனால் இந்த சீருடையை இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை அணிந்து விளையாடுமா இல்லையா என்பது குறித்து எந்த உறுதியான தகவலும் வெளியாகவில்லை.
Presenting #TeamIndia's Away Jersey 🤩🤩🇮🇳🇮🇳 What do you make of this one guys? #TeamIndia #CWC19 pic.twitter.com/TXLuWhD48Q
— BCCI (@BCCI) June 28, 2019