மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மீண்டும் மண்டியிட்ட பெங்களூரு..!! அரைசதம் அடித்தும் ஏமாற்றம் அடைந்த விராட் கோலி..!!
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 36 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 36 வது லீக் போட்டியில் பெங்களூரு-கொல்கத்தா அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனை தொடர்ந்து ஜேசன் ராய்-ஜெகதீசன் ஜோடி கொல்கத்தா அணியின் இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்கம் முதலே அதிரடிகாட்டிய இந்த ஜோடியில் ஜேசன் ராய் பந்துகளை பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசினார்.
ஜெகதீசன் 27 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து களமிறங்கிய வெங்கடேஷ் அய்யர் 31 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய நிதிஷ் ராணா வான வேடிக்கை நிகழ்த்தினார். இதற்கிடையே அரைசத்தத்தை பூர்த்தி செய்த் ஜேசன் ராய் 56 ரன்களில் ஆட்டமிழந்தார். பெங்களூரு வீரர்கள் கேட்சுகளை கோட்டை விட்டதை கொல்கத்தா அணி சாதகமாக பயன்படுத்திக் கொண்டது.
பட்டாசாய் வெடித்த நிதிஷ் ராணா 48 ரன்களில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 5 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. ரின்கு சிங் 18, டேவிட் வைஸ் 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பெங்களூரு அணிதரப்பில் விஜய் குமார், ஹசரங்கா தலா 2 விக்கெட்டும் முகமது சிராஜ் 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து 201 ரன்கள் இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு பாப்-டூ-பிளசி-விராட் கோலி ஜோடி இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்கம் முதலே அதிரடிகாட்டிய இந்த ஜோடியில் பாப்-டூ-பிளசி 7 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்த போது எதிர்பாராத விதாமாக ஆட்டமிழந்தார். இதன் பின்னர் ஷபாஸ் அகமது 2, மேக்ஸ்வெல் 5 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் விராட் கோலியுடன் கைகோர்த்த டாம் லேரர் அணியை சரிவில் இருந்து மீட்டார். இந்த ஜோடியினர் அதிரடியாக விளையாடி வெற்றியை நோக்கி பயணித்த நிலையில் டாம் லேரர் 34, விராட் கோலி 54 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். பெருத்த எதிர்பார்ப்புடன் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 22, பிரபு தேசாய் 10, ஹசரங்கா 5 ரன்களில் வெளியேறியதும் அந்த அணியின் நம்பிக்கை தகர்ந்தது.
20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி தரப்பில் அதிகபட்சமாக வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகளும், சுயாஷ் சர்மா மற்றும் ரஸல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன் மூலம் கொல்கத்தா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.