மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதல் போட்டியில் எப்போதும் தோல்வி..!! மோசமான சாதனைக்கு முடிவு கட்டுமா மும்பை இந்தியன்ஸ்..!!
ஐ.பி.எல் தொடரின் 5 வது லீக் போட்டியில் ஐதராபாத் ங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
கடந்த 2008 ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. நேற்று முன்தினம் தொடங்கிய 16 வது சீசனில், முதல் போட்டியில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான மோதலில் குஜராத் அணி வெற்றி பெற்றது. லக்னோ-டெல்லி அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில், லீக் சுற்றில் ஞாயிற்றுகிழமையான இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன. மாலை 3.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் மற்றொரு போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
கடந்த 2022 தொடரில் 4 வது இடத்தை பிடித்த பெங்களூரு அணியில் விராட்கோலி, பாப்-டூ-பிளிஸ்சிஸ், கிளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக், பின் ஆலென், முகமது சிராஜ், ஹர்ஷல் பட்டேல், ஹசரங்கா, ஷபாஸ் அகமது, பிரேஸ்வெல் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அந்த அணிக்கு தென்னாப்பிரிக்காவின் பாப்-டூ-பிளிஸ்சிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2022 தொடரில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது. கடந்த தொடரில் தொடர்சியாக 8 தோல்விகளை அடைந்த பிறகு அந்த அணி முதல் வெற்றியை பெற்றது. மும்பை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயத்தின் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார்.
கேப்டன் ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியாவை சேர்ந்த கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், டிம் டேவிட், திலக் வர்மா ஆகியோர் அந்த அணிக்கு நம்பிக்கை அளிக்கிறார்கள். மும்பை அணி கடந்த 10 தொடர்களில் தொடர்ச்சியாக தனது முதல் லீக் போட்டியில் தோல்வியை சந்தித்து வருகிறது.
இந்த மோசமான சாதனையை மாற்றி இந்த தொடரை வெற்றியுடன் தொடங்க மும்பை அணி எல்லா வகையிலும் போராடும். இவ்விரு அணிகளும் இதுவரை 30 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் 17 போட்டிகளில் மும்பை அணியும், 13 போட்டிகளில் பெங்களூரு அணியும் வெற்றி பெற்றுள்ளன.