தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ஜெயிச்சது என்னவோ பெங்களூரு அணி தான்; ஆனால், உண்மையான சந்தோசம் யாருக்கு தெரியுமா?
நடந்து வரும் 12 ஆவது ஐபிஎல் தொடரின் 54 ஆவது ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இதனைத் தொடர்ந்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் எளிமையான வாய்ப்பினை ஹைதராபாத் அணி தவறவிட்டுள்ளது. இந்த போட்டியில் வென்றிருந்தால் 14 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை தக்கவைத்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருக்கலாம்.
கொல்கத்தா அணி இன்று மும்பை அணியுடன் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் அணி தோற்றதன் மூலம் தற்பொழுது கொல்கத்தா அணி மிகுந்த உற்சாகத்தில் உள்ளது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் மும்பை அணியை கொல்கத்தா வீழ்த்தினால் 14 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும்.
இவ்வாறு நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணி வென்றதன் மூலம் கொல்கத்தா அணிக்கு தான் மிகுந்த சாதகமாக அமைந்துள்ளது. ஆனால் மும்பையிடம் கொல்கத்தா அணி தோல்வியுற்றால் ஹைதராபாத் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு கிடைத்துவிடும்.