யார்க்கர் பந்துகளை மிக துல்லியமாக வீசுவதன் ரகசியம் இது தான்! ரகசியத்தை உடைத்த பும்ரா



bumrah-aboit-yorker-balls

இந்திய அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளர், யார்க்கர் மன்னன் பும்ரா தான் துல்லியமாக யார்க்கர் வீசுவதற்கு என்ன காரணம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.

நீண்ட நாட்களாக சரியான வேகப்பந்து வீச்சாளர் இல்லாமல் இருந்த இந்திய அணிக்கு விலைமதிப்பில்லா முத்தாக கிடைத்துள்ளவர் தான் பும்ரா. இந்திய அணிக்கு விக்கெட் தேவைப்படும் போதெல்லாம் விக்கெட்டை கைப்பற்றி கொடுக்கிறார்.

wc2019

கடைசி ஓவர்களில் ரன்களை அடித்து குவிக்கலாம் என்ற கனவில் இருக்கும் எதிரணியினரின் கனவுகளை தவிடு பொடியாக்கிவிடுகிறார் பும்ரா. இதற்கெல்லாம் காரணம் அவர் சரியான லைன் மற்றும் லென்த்தில் பந்து வீசுவது தான். மேலும் யார்க்கர் பந்துகளை மிகவும் துல்லியமாக வீசி விக்கெட்டுகளை கைப்பற்றுவதும் தான்.

யார்க்கர் பந்து வீச முயன்று எத்தனை வேகப்பந்து வீச்சாளர்கள் புல் டாஸாக வீசி ரன்களை வாரி வழங்கிவிடுகின்றனர். அவர்கள் மத்தியில் எந்தவித தவறுமின்றி துல்லியமாக யார்க்கர் வீசுவதில் கைதேர்ந்தவர் தான் நம்பர் 1 பௌலர் பும்ரா. பங்களாதேசிற்கு எதிரான ஆட்டத்திலும் கடைசி இரண்டு பந்தையும் மிக துல்லியமாக வீசி இந்திய அணியை வெற்றிபெற செய்தார்.

wc2019

பின்னர் ஆட்டத்தின் முடிவில் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய பும்ராவிடம் இவ்வளவு துல்லியமாக யார்க்கர் வீசுவதன் ரகசியம் என்ன என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதலளித்த பும்ரா, "இதன் ரகசியம் விடா முயற்சியும் பயிற்சியும் தான். அதே போன்று பந்து வீச வேண்டுமென தொடர்ந்து பயிற்சி எடுத்துக்கொண்டே தான் இருக்கிறேன். விடாமல் பயிற்சி செய்தால் எதையும் செய்ய முடியும்" என்று கூறியுள்ளார்.


மேலும் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறிவிட்டதால் அடுத்த போட்டியில் ஓய்வு எடுப்பீர்களா என கேட்டதற்கு, "இல்லை, இது எனது முதல் உலகக்கோப்பை, நான் இன்னும் பல போட்டிகள் ஆட வேண்டும். ஓய்வு எடுக்கும் எண்ணம் இல்லை" என கூறியுள்ளார்.