உலகக்கோப்பையில் பும்ரா படைத்த அசத்தல் சாதனை!! உற்சாகத்தில் இந்திய ரசிகர்கள்!!



bumrah bowled most maidan in world cup

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் நேற்று மான்செஸ்டறில் நடைபெற்றது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 46.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை பெய்ததால் ஆட்டம் இடையில் நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் இன்று (புதன் கிழமை) போட்டி தொடரும் என அறிவிக்கப்பட்டது. இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி இன்று மதியம் 3 மணியளவில் தொடங்கியது.

bumrah

ஆட்டம்.50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்துள்ளது.

அதனை தொடர்ந்து இந்தியா அணி களமிறங்கி தற்போது விறுவிறுப்பாக விளையாடி வருகிறது. மேலும் தற்போது 23ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழந்தது.

bumrah

மேலும் நேற்று நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் பும்ரா வீசிய முதல் இரு ஓவர்களும் மெயிடன்களாக இருந்தன. இதனால் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் அதிக மெயிடன்களை வீசிய வீரர் என்கிற பெருமையை பும்ரா பெற்றுள்ளார் .

மேலும் ஆர்ச்சர் 8 மெய்டன் கம்மின்ஸ் மற்றும் வோக்சும் 6 மெய்டன்கள் வீசியுள்ளனர்.மேலும்  அமிர், மாரிஸ், ஸ்டார்க் ஆகியோர் 5 மெயிடன்களை வீசியுள்ளனர்.