மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காற்றில் பறந்து சென்ற ஸ்டெம்ப்! பும்ரா வீசிய மின்னல் வேக பந்து வீச்சு. வீடியோ உள்ளே.
மேற்கிந்திய தீவுகள் அணியுடனான சுற்றுப்பயண ஆட்டத்தில் T20 , ஒருநாள் போட்டிகளை அடுத்து டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியுடன் விளையாடிவருகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 297 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தது.
இதனை அடுத்து ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து இறுதியில் 222 ஓட்டங்கள் பெற்றனர். இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக ஆடிய இந்திய அணி 343 ஓட்டங்களுக்கு டிக்ளர் செய்தது. இதில் ரஹானே 102 ஓட்டங்களிலும், ஹனுமன் விஹாரி 90 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதனை அடுத்து 343 என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்கள் இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஒற்றை இழக்க ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதில் பிராவோ ஆடுமுனையில் இருந்தபோது இந்திய அணி வீரர் பும்ரா வீசிய பந்து ஸ்டெம்பில் பட்டு பலமுறை சுழன்று கீப்பரிடம் சென்றது.
துல்லியமான பந்துவீச்சில் ஸ்டெம்பை பறக்கவிட்ட அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.
My favourite wicket from #bumrah 's five for 😉#WIvIND #INDvWI #INDvsWI pic.twitter.com/WbOfA8vCkj
— Nikhil Apegaonkar (@iamnik7) August 25, 2019