மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்ளீஸ்... திரும்பி வா.! தமிழ்ப்பெண்ணான மனைவியை நினைத்து உருகும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா.!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மனைவி குறித்து வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.
2022 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது. ஐபிஎல் தொடருக்கு பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனது பங்களிப்பை கொடுக்க காத்திருக்கிறார்.
பும்ராவுக்கும், சஞ்சனா கணேசன் என்ற தமிழ்ப்பெண்ணுக்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அவரை மிஸ் செய்வதாக பதிவிட்டுள்ளார் பும்ரா.
அவர் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், தயவு செய்து சீக்கிரம் திரும்பி வா, என இருவரும் சிரித்தப்படி இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதற்கு பதில் பதிவிட்ட சஞ்சனா கணேசன், வீட்டிற்கு தான் ஓடி வந்து கொண்டிருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.