மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பும்ரா.! பும்ராவை கதறவிடும் ரசிகர்கள்.! என்ன காரணம் தெரியுமா?
இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக திகழ்பவர் பும்ரா. இவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 26 ஓவர்களை வீசி விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. இதனையடுத்து 2வது இன்னிங்ஸிலும் அவர் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை. இதனால் அவரை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
பும்ரா தொலைக்காட்சி தொகுப்பாளினி சஞ்சனா கணேசனை சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில், புதுமண ஜோடியான பும்ரா - சஞ்சனா கணேசன் இருவரும் சுற்றுலாவை கொண்டாடி வருகின்றனர். பும்ரா தனது மனைவியுடன் ஜோடியாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சிரித்தவாறு கேப்சனும் போட்டுள்ளார்.
Smiling at you. 😃 pic.twitter.com/qMPYj8gflP
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) June 30, 2021
புகைப்படத்தில் தம்பதி அழகாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்த போதிலும் சிலர் பும்ராவை விமர்சித்துள்ளனர். அதாவது, சமீபத்தில் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. ஆனால் நீங்கள் சிரிக்கிறீர்கள். சில நாட்களுக்கு சமூகவலைதளங்களில் இது போல பதிவிடாதீர்கள். முக்கியமான போட்டியில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாகிவிட்டு, மனைவியுடன் எப்படி ஜாலியாக ஊர்சுற்ற முடிகிறது, பொறுப்புடன் நடந்துக்கொள்ளுங்கள், கொஞ்சம் கூட கவலை இல்லையா? என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.