திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஒரு போட்டியை ரத்து செய்தால் எவ்வளவு வேதனையாக இருக்கும் தெரியுமா! கபில்தேவ் விளக்கம்
காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் கேப்டன்கன் அசாருதீன், கங்குலி மற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோர் உலக கோப்பையில் பாகிஸ்தானுடன் ஆடக் கூடாது என்று கருத்து தெரிவித்து உள்ளனர்.
முன்னாள் கேப்டன்கள் கவாஸ்கர், தெண்டுல்கர் ஆகியோர் உலக கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடி வீழ்த்த வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
உலக கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடுவது பற்றி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இது தொடர்பாக பி.சி.சி.ஐ. நிர்வாகிகள் இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகிறது.
இந்நிலையில் "ஒரு போட்டியை தடை செய்தால் ஒரு வீரராக எவ்வளவு வேதனையாக இருக்கும் தெரியுமா; விளையாடக் கூடாது என எந்த வீரரையும் கட்டுப்படுத்த கூடாது. எங்களைப் போன்ற வீரர்களுக்கு விளையாட்டை தவிர வேறு ஒன்றும் தெரியாது. எனவே போட்டிகளை ரத்து செய்வது சரியானது அல்ல" என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.