தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
அவரெல்லாம் எங்களுக்கு ஒரு ஆளே கிடையாது! கெத்து காட்டும் தோனி & கோ!
ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் வேலையில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் இன்று மோதுகின்றன. சென்னையின் சொந்த மண்ணில் நடைபெறும் இன்றைய ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. சென்னை சுழற் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமா இருப்பதால் இரண்டு அணிகளுக்கும் பவுலிங்கில் மிகவும் கவனமாக செயல்படும்.
சென்னை, கொல்கத்தா அணிகளை பொறுத்தவரை இரண்டு அணிகளும் ஐந்தில் நான்கு போட்டிகளில் வெற்றிபெற்று முதல் மற்றும் இரண்டாம் இட்டதில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி முதல் இடத்தை பிடிக்கும். இந்நிலையில் கொல்கத்தா அணிக்கு மிக பக்கபலமாக இருப்பது ரஸ்ஸல். கடைசியாக பெங்களூர் அணியுடன் அவர் ஆடிய ருத்ரதாண்டவம் யாராலும் மறக்க முடியாது.
இந்நிலையில் இன்றைய ஆட்டம் குறித்து பேட்டி அளித்த சென்னை அணியின் பயிற்சியாளர் பிளமிங் கூறுகையில் ரஸ்ஸல் எப்படி விளையாடினாலும் எங்களுக்கு கவலை இல்லை. அவரை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை.
கிறிஸ் லின்,தினேஷ் கார்த்திக், உத்தப்பா போன்ற அருமையான வீரர்கள் உள்ளனர். அவர்களின் ஆட்டத்தை தான் உற்றுநோக்குவோம். சிறப்பாக விளையாடினாலும் ரசலை கண்டுகொள்ள மாட்டோம் என்று கூறினார்.