மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடுத்த சுற்றை உறுதி செய்யுமா சி.எஸ்.கே..?!! டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் இன்று மோதல்..!!
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 55 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 54 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இன்று சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் 55 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
சென்னை அணி இதுவரை 11 போட்டிகளில் பங்கேற்று 6 வெற்றி 4 தோல்வி மர்றும் ஒரு போட்டியில் முடிவிலை என்ற கணக்கில் 13 புள்ளிகளுடன் 2 வது இடத்தை பிடித்துள்ளது. சென்னை அணியின் பேட்டிங் வரிசையில் டெவன் கான்வே 458 ருதுராஜ் கெய்க்வாட் 384, ஷிவம் துபே 290, அஜின்கியா ரஹானே 209 ரன்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
பந்து வீச்சை பொறுத்தவரை துஷார் தேஷ்பாண்டே 19, ரவீந்திர ஜடேஜா 15, பதிரானா 10, மொயீன் அலி, மகேஷ் தீக்ஷனா மற்றும் ஆகாஷ் சிங் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். பென் ஸ்டோக்ஸ் இந்த போட்டியிலும் களமிறங்க வாய்ப்பில்லை. காயத்தில் இருந்து மீண்ட அனுபவ பந்துவீச்சாளர் தீபக் சஹர் நல்ல நிலைக்கு திரும்புவது அவசியம்.
டெல்லி அணி 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருந்தாலும், அந்த அணி கடைசியாக பங்கேற்ற 5 போட்டிகளில் 4 ல் வெற்றி பெற்று நல்ல நிலைக்கு திரும்பியுள்ளது. அந்த அணியில் கேப்டன் டேவிட் வார்னர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அக்ஸர் படேல் தேவையான நேரத்தில் அதிரடியை வெளிப்படுத்துகிறார்.
இவ்விரு அணிகளும் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதியதில் சென்னை 17, டெல்லி 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. ப்ளே-ஆப் சுற்றுக்கு முன்னேற குறைந்தது 2 வெற்றி தேவை என்ற நிலையில் சென்னை அணியும், கவுரவ வெற்றியுடன் தொடரை முடிக்க போராடும் டெல்லி அணியும் வெற்றிக்காக மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.