மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீயா நானா..?!! பரபரப்பான கட்டத்தில் அடுத்த சுற்றுக்கு முன்னேறப் போவது யார்?!! சென்னை-மும்பை மோதல்..!!
சென்னையில் இன்று நடைபெறும் 49 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 48 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இன்று மாலை 3.30 மணிக்கு சென்னையில் நடைபெறும் 49 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை அணி இதுவரை 10 போட்டிகளில் பங்கேற்று 5 வெற்றி, 4 தோல்வி மற்றும் ஒரு போட்டியில் முடிவில்லை என்ற கணக்கில் 11 புள்ளிகளை பெற்று 3 வது இடத்தை பிடித்துள்ளது. மீதமுள்ள 4 போட்டிகளில் குறைந்தது 3 வெற்றி பெற்றால்தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில், அந்த அணி வெற்றிக்காக போராடும்.
சென்னை அணியின் பேட்டிங் வரிசையில் டெவன் கான்வே 414, ருதுராஜ் கெய்க்வாட் 354, ஷிவம் துபே 264, ரஹானே 224 ரன்களுடன் வலுவான நிலையில் உள்ளனர். பந்துவீச்சில் அனுபவம் வாய்ந்த பென் ஸ்டோக்ஸ், மகாலா காயத்தால் அவதிப்படும் நிலையில் பதிரானா, ஆகாஷ் சிங், துஷர் தேஷ்பாண்டே போன்ற இளம் வீரர்களை நம்பி அந்த அணி களமிறங்கும். கடந்த போட்டியில் காயத்தில் இருந்து மீண்டு களமிறங்கிய தீபக் சஹர் முத்திரை பதிக்கவில்லை.
இந்த தொடரில் தொடக்கத்தில் தடுமாற்றத்தை சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணி முக்கியமான கட்டத்தில் எழுச்சி பெற்றுள்ளது. அந்த அணி 9 போட்டிகளில் பங்கேற்று 5 வெற்றி, 4 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று 6 வது இடத்தை பிடித்துள்ளது. அந்த அணியின் பேட்டிங் வரிசையில் இதுவரை தடுமாறி வந்த சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் அதிரடிக்கு திரும்பியுள்ளது மும்பைக்கு பலம் சேர்க்கிறது.
முன்னதாக மும்பையில் நடைபெற்ற போட்டியில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்க மும்பை அணி போராடும். சொந்த மண்ணில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முன்னிலை வகிக்க சென்னை அணி மல்லுக்கட்டும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. மேலும் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணியே புள்ளி பட்டியலில் 2 வது இடத்தை பிடிக்கும் என்பதால் இவ்விரு அணிகளின் மோதலில் அனல் பறக்கும்.
இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் இதுவரை 35 போட்டிகளில் மோதியதில் மும்பை 20, சென்னை 15 வெற்றிகளை பெற்றுள்ளன.