மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஐ.பி.எல் 2023 ல் இன்று: சென்னையில் தொடங்கும் மகா யுத்தம்..!! மல்லுக்கட்டும் சென்னை, ராஜஸ்தான் அணிகள்..!!
சென்னயில் இன்று தொடங்கும் 17 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
கடந்த 2008 ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 16 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. சென்னயில் இன்று தொடங்கும் 17 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
தனது தொடக்க போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்த சென்னை அணி, அதன் பிறகு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன் அணிகளை வீழ்த்தி வெற்றிப்பாதைக்கு திரும்பியது. கடைசியாக விளையாடிய மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ரஹானேவின் அதிரடியால் சுலபமாக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி ஐதராபாத், டெல்லி அணிகளுக்கு எதிராக வெற்றியும், பஞ்சாப் அணியுடன் தோல்வியும் அடைந்து 4 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால், கேப்டன் சஞ்சு சாம்சன், ரியான் பராக் மற்றும் பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் பவுல்ட், அஸ்வின் வலு சேர்க்கிறார்கள்.
இன்றைய போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறும் முனைப்புடன் ராஜஸ்தான் அணி களமிறங்கும். உள்ளூரில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று 3 வது வெற்றியை பதிவு செய்ய சென்னை அணியும் மல்லக்கட்டும். இரு அணிகளும் சம பலத்துடன் மோதுவதால் களத்தில் அனல் பறக்கும் .