மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சூறாவளியை சுருட்டி வைத்த சென்னை அணி! தட்டு தடுமாறிய கொல்கத்தா!
ஐபில் போட்டியின் 23 வது ஆட்டம் இன்று சென்னையில் நடைபெற்றுவருகிறது. இன்றைய ஆட்டத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற சென்னை அணி கொல்கத்தா அணியை பேட் செய்ய அழைத்தது. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி ஆரம்பம் முதல் தடுமாறியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லின் மற்றும் ராணா இருவரும் ஓட்டம் ஏதும் இல்லாமல் ஆட்டமிழந்தனர்.
அதனை தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணியின் அணைத்து வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டம் இழந்தனர். கொல்கத்தா அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரஸ்ஸலின் காட்டு அடி சென்னையிடம் எடுபடவில்லை. இதற்கு முன்னர் பெங்களூர் அணியிடம் 13 பந்துகளில் 13 பந்துகளில் 48 ஓட்டங்கள் பெற்ற ரஸ்ஸல் சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினார்.
ஒருவழியாக ஆட்டத்தின் இறுதிவரை நின்ற ரஸ்ஸல் 44 பந்துகளில் 50 ஓட்டங்கள் மட்டுமே பெற்றார். சூறாவளியாக சுழன்று அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரஸ்ஸலை சுருட்டி வைத்தது சென்னை அணி.