மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மும்பையை அச்சுறுத்திய அஜின்கியா ரஹானே..!! 2 வது வெற்றியை ருசித்த சி.எஸ்.கே..!!
கடந்த 2008 ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 12 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடபெற்ற 12 வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து மும்பை அணிக்கு ரோகித் சர்மா-இஷான் கிஷன் ஜோடி களமிறங்கியது . தொடக்க வீரர்கள் இருவரும் அதிரடி காட்டினர். ரோகித் சர்மா 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் துஷார் தேஷ்பாண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
மறுபுறம் சிறப்பாக ஆடிய இஷான் கிஷன் 32 ரன்களுக்கு ஆட்டமிழக்க , அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இதன் காரணமாக தடுமாறிய மும்பை அணிக்கு தடுமாறியது. அடுத்து வந்த கேமரூன் கிரீன் 12 ரன்களும் , திலக் வர்மா 22 ரன்களும் எடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறி கொடுத்தனர். இறுதிகட்டத்தில் அதிரடி காட்டிய டிம் டேவிட் 31 ரன்களில் ஆட்டமிழந்தார்.
20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 157ரன்கள் எடுத்தது. சென்னை அணி சார்பில் ஜடேஜா 3 , மிட்செல் சான்ட் னர் , துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்களை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து 158ரன்கள் இலக்கை துரத்திய சென்னை அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட்-டெவன் கான்வே தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
டெவன் கான்வே ரன் எதுவும் எடுக்காமல் முதல் பந்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அடுத்து வந்த ரஹானே அதிரடியாக மட்டையை சுழற்றியதுடன் பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்ட அவர் சென்னை ரசிகர்களை குதூகலப்படுத்தினார். குறிப்பாக மும்பை அணியின் அர்சத் கான் வீசிய ஓவரில் 1 சிக்ஸ்ர் மற்றும் 4 பவுண்டரிகளை விளாசி அமர்களப்படுத்தினார்.
மேலும் 19 பந்துகளில் அரைசதம் அடித்த ரஹானே 27 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிதானம் காட்டிய ருதுராஜ் கெய்க்வாட் 40 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதிகட்டத்தில் அதிரடிகாட்டிய அம்பத்தி ராயுடு 20 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 18.2 ஓவர்கள் விளையாடி சென்னை அணி 159 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணிக்கு இது 2 வது வெற்றியாகும்.