சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
மீண்டும் வரலாறு படைத்த சி.எஸ்.கே..!! ப்ளே-ஆப் சுற்றுக்குள் 10 வது முறையாக எண்டரி கொடுத்து அசத்தல்..!!
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி ப்ளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 66 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. டெல்லியில் இன்று நடைபெற்ற 67 வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
ப்ளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெற இந்த போட்டியில் வெற்றி பெற்றேயாக வேண்டிய கட்டாயத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து சென்னை அணியின் இன்னிங்ஸை ருதுராஜ் கெய்க்வாட்-டெவன் கான்வே ஜோடி தொடங்கியது.
இந்த ஜோடி அதிரடியாக தொடங்கிய நிலையில், 141 ரன்கள் குவித்த பின்பு பிரிந்தது. சக்காரியா வீசிய 15 வது ஓவரின் 3 வது பந்தில் கெய்க்வாட் 79 ரன்களுடன் ஆட்டமிழந்தை தொடர்ந்து, களமிறங்கிய ஷிவம் துபே 9 பந்துகளில் 22 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் தோனி களமிறங்கினார். இதற்கிடையே சிறப்பாக விளையாடிய டெவன் கான்வே 87 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சென்னை அணி 3 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது.
இதனை தொடர்ந்து 224 ரன்கல் இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு டேவிட் வார்னர்-பிரித்திவி ஷா ஜோடி இன்னிங்ஸை தொடங்கியது. இந்த ஜோடியில் பிரித்திவி ஷா 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றினார். இதன் பின்னர் பில் சால்ட்டுடன் கைகோர்த்த வார்னர் தொடக்கத்தில் ரன் சேர்க்க வழி தெரியாமல் திணறினார்.
தனது 3 வது ஓவரை வீசிய தீபக் சஹர், பில் சால்ட் 3, ரீலி ரூசோவ் 0 (கோல்டன் டக்) அடுத்தடுத்த பந்தில் வெளியேற்றி இரட்டை செக் வைத்தார். பவர் பிளே ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்த டெல்லி அணி 34 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய யஷ் தூல், டேவிட் வார்னருடன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடினார். யஷ் தூல் 13 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அக்ஸர் பட்டேலுடன் இணைந்த டேவிட் வார்னர் அதிரடிக்கு திரும்பினார்.
ஆட்டத்தின் 14 வது ஓவரை வீசிய தீபக் சஹர், அக்ஸர் பட்டேலை 15 ரன்களுக்கு வெளியேற்றினார். இதன் பின்னர் களமிறங்கிய அமான் கான் 7, நீண்ட நேரம் தனியொருவனாக போராடிய டேவிட் வார்னர் 86 ரன்களில் ஆட்டமிழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இதன் மூலம் 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 2 வது அணியாக ப்ளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதுவரை 14 தொடர்களில் பங்கேற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது இது 10 வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.