#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
டிஎன்பிஎல் இறுதிப்போட்டி.. திருச்சியா? சென்னையா? நீயா.. நானா..மோதல்.! பரபரப்பாக முடிந்த ஆட்டம்.!
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திருச்சி ரூபி வாரியர்ஸ் அணிகள் நேற்று மோதியது. இதில் டாஸ் வென்ற திருச்சி வாியர்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது.
சேப்பாக் அணியில் ஜெகதீசன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த அணியில் அதிகபட்சமாக 90 ரன்களை குவித்தார். இதனையடுத்து 184 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருச்சி வாரியர்ஸ் அணியின் துவக்க வீரர்கள் அமீத் சாத்வீக் மற்றும் சந்தோஷ் ஷீவ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக ஆடிய அமீத் சாத்வீக் 36 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்ததாக சந்தோஷ் ஷீவ் 16 ரன்களை எடுத்து அவுட் ஆகி வெளியேறினார்.
இதனையடுத்து களமிறங்கிய வீரர்களும் ஓரளவுக்கு நிதானமாக ஆடி அந்த அணி 102 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்தது. இதனையடுத்து களமிறங்கிய சரவண குமார் சிறப்பாக ஆடி 25 பந்துகளில் 45 ரன்களை குவித்தார். இறுதியில் 20 ஓவர்களில் முடிவில் திருச்சி அணி 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தநிலையில் சேப்பாக் கில்லி அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.