திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விராட் மாமா, வாமிகா கூட டேட்டிங் போகலாமா?.. சிறுவனின் சர்ச்சை பதாகையால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
ஐ.பி.எல் 2023 தொடரில் நேற்று 24 வது போட்டி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.
போட்டியின் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் அடித்து ஆட்டத்தை வென்றது. ஆர்.சி.பி அணி 8 விக்கெட் இழப்புக்கு 20 ஓவரில் தனது இலக்கான 226 ஐ அடிக்க முடியாமல் திணறி 218 ரன்கள் அடித்து தோல்வி அடைந்தது.
இந்த நிலையில், நேற்றைய ஆட்டத்தில் சிறுவன் ஒருவன் தனது கைகளில் சர்ச்சை பதாகையை ஏந்தி இருக்கிறான். அந்த பதாகையில், "விராட் மாமா. நான் வாமிகாவுடன் டேட்டிங் சொல்லட்டுமா?" என கேட்டுள்ளார்.
இந்த பதிவு வைரலான நிலையில், சிறுவனுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், நீ ஏந்திய பதாகையின் அர்த்தம் தெரியுமா? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கிரிக்கெட்டர் விராட் கோலிக்கும் - நடிகை அனுஸ்கா ஷர்மாவுக்கும் திருமணம் நடைபெற்று முடிந்து சமீபத்தில் அழகிய பெண் குழந்தையான வாமிகா பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.