ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
கொரோனா பரிசோதனை செய்து கொண்ட தோனி! எப்போது சென்னை வருகிறார் தல தோனி.?
கடந்த ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய அணி அடைந்த தோல்விக்குப்பின், எந்தவிதமான கிரிக்கெட் ஆட்டங்களிலும் விளையாடாமல் தோனி இருந்து வருகிறார். இந்தநிலையில் சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல்-ல் களமிறங்குவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் ஐபிஎல் போட்டியும் தள்ளிப்போனது.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அமீரகத்தில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் ஆரம்பமாக உள்ளது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐ.பி.எல் தொடர்களில் விளையாட உள்ள எட்டு அணிகளின் வீரர்கள் மற்றும் அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் குறைந்தபட்சம் நான்கு முறைக்கு மேல் கொரோனா பரிசோதனை செய்து கொண்ட பிறகே இந்த தொடரில் விளையாட முடியும் என தெரிவித்திருந்தது பி.சி.சி.ஐ.
இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு வரும் 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி முகாமைமுடித்துவிட்டு ஐக்கிய அமீரகத்துக்கு சிஎஸ்கே அணியினர் இம்மாதம் 22-ம் தேதி புறப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் நடக்கும் இந்த பயிற்சி் முகாமில் பங்கேற்க சென்னை புறப்படும் முன் தோனி ராஞ்சி நகரில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தோனி மட்டுமல்லாது சக வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையின் முடிவை பொறுத்தே தோனி வரும் 14 ஆம் தேதியன்று ராஞ்சியிலிருந்து சென்னைக்கு புறப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.