மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எதிரணியில் பீல்டிங் செய்த கிரிக்கெட் வீரர்! பந்தை வேகமாக அடித்து அவரது மூக்கை உடைத்த சகோதரர்! வைரல் வீடியோ!
ஆஸ்திரேலியாவில் நடந்த கிரிக்கெட் போட்டியில் சகோதரர் பீல்டிங் நின்ற நிலையில், துடுப்பாட்ட வீரர் அடித்த பந்து அவர் மூக்கை உடைத்து இரத்தம் கொட்டியது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விளையாட்டு என்றாலே சிலருக்கு அடிபடுவது வழக்கம். சில விளையாட்டுகளில் அடிபட்டு உயிரிழந்த வீரர்களும் உள்ளனர். இந்தநிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு பந்து பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் மார்ஷ் கோப்பைக்கான உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா அணிகள் மோதியது.
GRAPHIC CONTENT: Not for the faint-hearted, here is the footage of Agar's knock. Ouch! #MarshCup pic.twitter.com/h6Jj3drPsO
— cricket.com.au (@cricketcomau) November 17, 2019
அந்த ஆட்டத்தில் தெற்கு ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து கொண்டிருந்த போது அந்த அணியின் வெஸ் அகர் அடித்த ஒரு பந்தை கேட்ச் செய்ய முயற்சித்த போது அவரது சகோதரரான ஆஷ்டன் அகரின் முகத்தில் பட்டு கீழே சுருண்டு விழுந்தார்.
இதனைப்பார்த்து சக வீரர்கள் ஓடிவந்து தூக்கியபோது அவரின் முகத்தில் பாத்து பலமாக அடிபட்டு ரத்தம் கொட்டியது. இதனையடுத்து அவரை மீட்டு ஆஷ்டன் அகருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.