#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"திரும்ப வந்துட்டேன்னு சொல்லு" புதிய உத்வேகத்துடன் அணிக்கு திரும்பிய கிரிஸ் கெய்ல்!உற்சாகத்தில் ரசிகர்கள்
சிக்சர் மன்னன், கிரிக்கெட் ஜாம்பாவான் என பல்வேறு புனைப்பெயர்களை கொண்டவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் கிரிஸ் கெய்ல். இவர் 6 மாதங்களுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிரிஸ் கெய்ல் இடம்பெற்றுள்ளார். இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் வங்கதேச அணிக்கு எதிராக ஆடினார். ஆப்கானிஸ்தான் பிரிமியர் லீக் மற்றும் T10 லீக்கில் ஆடிய கெய்ல் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான தொடர்களில் ஆடவில்லை.
39 வயதான அனுபவம் வாய்ந்த வீரர் அணிக்கு திரும்பியதில் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ்ல் பிரையன் லாராவிற்கு அடுத்தப்படியாக அதிக போட்டிகள் மற்றும் ரன்களை எடுத்துள்ள வீரர் கெய்ல் தான். மேலும் அதிகமாக 23 ஒருநாள் சதங்களும் இவர் தான் அடித்துள்ளார்.