காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
முதல் போட்டியிலேயே சிஎஸ்கே அணிக்கு ஏற்படும் பின்னடைவு.. எப்படி சமாளிக்கப் போகிறார் தோனி!
ஐபிஎல் 2020 தொடரில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் கடந்த மாதம் 21 ஆம் தேதி துபாய் சென்றனர். அங்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் சிஎஸ்கே தரப்பில் 13 பேருக்கு கொரோனா உறுதியானது.
இதில் தீபக் சாகர் மற்றும் ருத்துராஜ் ஹெய்க்வாட் இருவரும் அடங்குவர். அதன் பின்னர் எடுக்கப்பட்ட பரிசோதனையில் அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் உறுதியானது.
தற்போது ருத்துராஜ் தவிர மற்றவர்கள் குவாரண்டைனில் இருந்து வெளியேறி தங்கள் பணிகளை தொடர்ந்தனர். தொடர்ந்து இரண்டு முறை கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்த பிறகும் பிசிசிஐ மருத்துவ குழுவிடம் இருந்து ருத்துராஜிற்கு கிளியரன்ஸ் சர்டிபிகேட் வழங்கப்படவில்லை.
இதனால் முதல் போட்டியில் ருத்துராஜ் கலந்துகொள்வது கடினம் தான் என சிஎஸ்கே சிஈஓ விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மிடில் ஆர்டரில் ரெய்னா இல்லாததால் ருத்துராஜ் அந்த இடத்தை நிரப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது அதற்கும் வாய்ப்பில்லை என்பதால் தோனி எப்படி சமாளிக்கப் போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.