திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
5 அதிரடி வீரர்களை ஒப்பந்தம் செய்தது சி.எஸ்.கே: தென்னாப்பிரிக்க லீக் தொடரிலும் பட்டையை கிளப்புமா இந்த கூட்டணி..?!
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை போன்று தென் ஆப்பிரிக்காவில் டி-20 லீக் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெற உள்ள இந்த போட்டி தொடரையொட்டி அறிமுகப்படுத்தப்பட்ட 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல் கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜோகனஸ்பர்க் அணியை, பிரபல ஐ.பி.எல் அணியான சி.ஏஸ்.கே அணியை நிர்வகிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிர்வாகம் வாங்கியுள்ளது. மேலும் கேப்டவுன் அணியை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகமும், டர்பன் அணியை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நிர்வாகமும், செயின்ட் ஜார்ஜ் பார்க் அணியை ஐதராபாத் சன்ரைசர்ஸ் நிர்வாகமும், பார்ல் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகவும், பிரிட்டோரியா அணியை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகமும் வாங்கியுள்ளன.
இந்த நிலையில், சி.எஸ்.கே கிரிக்கெட் லிமிட்டட் நிர்வாகம் வாங்கியுள்ள ஜோகனஸ்பர்க் அணி முதற் கட்டமாக 5 முக்கிய வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளது. தென்னாப்பிரிக்காவின் பாஃப் டு-பிளசி, இங்கிலாந்தின் மொயின் அலி, இலங்கயை சேர்ந்த மகேஷ் தீக்ஷனா, மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சாளர் ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் தென்னாப்பிரிக்க வீரர் ஜெரால்ட் கோட்ஸி என 5 வீரர்களை ஜோகனஸ்பர்க் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
இவர்களுள் மொயின் அலி மற்றும் மகேஷ் தீக்ஷனா ஏற்கனவே சி.எஸ்.கே அணிக்காக விளையாடி வருகின்றனர். மேலும் பாஃப் டு-பிளசி ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்காக கடந்த காலங்களில் விளையாடியவர். இதனால் இந்த வெற்றி கூட்டணி தென் ஆப்பிரிக்கா லீக் தொடரிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.