தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ஐ.பி.எல் 2023ல் கோப்பை யாருக்கு..?!! கட்டம் யாருக்கு சாதமாக உள்ளது..?: வைரலாகும் வீடியோ..!!
ஐ.பி.எல் 2023 இறுதிப் போட்டியில் எந்த அணி வெல்லும் என்ற ஜோதிடர்களின் கணிப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், லீக் சுற்று மற்றும் ப்ளே-ஆப் சுற்று போட்டிகள் அனைத்தும் நடந்து முடிந்துள்ளன. புள்ளிகளின் அடிப்படையில் குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை அணிகள் ப்ளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.
கடந்த 24 ஆம் தேதி தொடங்கிய ப்ளே-ஆப் சுற்றின் முதலாவது தகுதி சுற்று போட்டியில் குஜராத் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன் பின்னர் நடைபெற்ற எலிமினேட்டர் என்கிற வெளியேற்றுதல் சுற்றில் லக்னோ அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் பந்தாடிய மும்பை அணி 2 வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது.
நேற்று முன்தினம் நடைபெற்ற 2 வது தகுதி சுற்று போட்டியில் மும்பை அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம், குஜராத் அணி தொடர்ந்து 2 வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் அறிமுகமான முதல் 2 தொடர்களில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையை அந்த அணி பெற்றது.
இந்த நிலையில், 16 வது ஐ.பி.எல் தொடரை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வெல்லப் போவது யார் என்பதை நிர்ணயிக்கும் பிரம்மாண்ட இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதியதில் குஜராத் 3, சென்னை 1 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
தொடர்ந்து 2 வது முறையாக கோப்பையை வெல்ல நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியும், 5 வது முறையாக கோப்பையை வென்று சாதனை பட்டியலில் இணைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மல்லுக்கட்டும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது. பேட்டிங்கிற்கு உகந்த ஆடுகளமான ஆமதாபாத் மைதானத்தில் இரு அணிகளுமே ரன் வேட்டை நடத்தும் என்பதால் ரசிகர்களுக்கு தரமான விருந்து காத்திருக்கிறது.
இந்த நிலையில் இன்றைய போட்டியில் எந்த அணி வெல்லும் என்று ஜோதிட சாஸ்திரத்தின் படியும், நியூமராலஜி மற்றும் கிளி ஜோதிடரிடமும் நடத்திய கணிப்புகள் ஆச்சரியத்தையும் ஆவலையும் தூண்டும் விதமாக உள்ளது.