#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்பு! ஏன் தெரியுமா?
இன்று இரவு நடைபெறும் ஐபில் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
ஐபில் சீசன் 13 T20 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 23 போட்டிகள் இதுவரை முடிந்துள்ளநிலையில் இன்று நடைபெறும் இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் விளையாடிவருகிறது.
இரவு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகிறது. இந்த சீசனில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்று 4 புள்ளிகளுடன் 6 வது இடத்தில் உள்ளது. அதேநேரம் 5 போட்டிகளில் மூன்று வெற்றி, 6 புள்ளிகளுடன் பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
இன்றைய போட்டியில் இரு அணிகளும் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்க உள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு முன் இதுவரை நடந்துள்ள ஐபில் போட்டிகளில் சென்னை அணியே அதிகம் வெற்றிபெற்றுள்ளது.
இரு அணிகளும் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதி உள்ளத்தில், சென்னை அணி 15 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு அணி வெறும் 8 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. ஒரு ஆட்டம் முடிவு ஏதும் இல்லாமல் முடிந்துள்ளது. எனவே பெங்களூரு அணியுடனே சென்னை ஆட்டத்தின் வெற்றி சதவீதம் பலமடங்கு அதிகமாக இருப்பதால் இன்று சென்னை அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.