மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதல் ஓவரில் பந்துகளை பறக்கவிட்ட ராஜஸ்தான்.! மொத்தமாக தட்டி தூக்கிய கம்மின்ஸ்.! கெத்து காட்டும் கொல்கத்தா.!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 54-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி ராயல்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து கொல்கத்தா அணியின் துவக்க வீரர்களாக கில் மற்றும் ராணா களமிறங்கினர். ராணா தான் சந்தித்த முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார். நிதானமாக ஆடிய கில் 24 பந்துகளுக்கு 36 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆனார். இதனையடுத்து களமிறங்கிய திரிபாதி 34 பந்துகளுக்கு 39 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆனார். தினேஷ் கார்த்திக் அவர் சந்தித்த முதல் பந்திலேயே அவுட் ஆனார். அடுத்ததாக களமிறங்கிய மோர்கன் அதிரடியாக ஆடி 35 பந்துகளுக்கு 68 ரன்கள் எடுத்தநிலையில் இறுதிவரை களத்தில் நின்றார்.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 191- ரன்கள் குவித்தது. இதனையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்களான ராபின் உத்தப்பா மற்றும் ஸ்டோக்ஸ் முதல் ஓவரிலேயே அதிரடியாக ஆடத்தொடங்கினர். இதனையடுத்து ராஜஸ்தான் அணி வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி ஐந்து ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறி ஆடிவருகின்றனர். கொல்கத்தா அணியின் கம்மின்ஸ் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.