மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆட்டத்தை தலைகீழாக மாற்றிய தீபக் சாஹர்.! கடைசி நேரத்தில் கதறவிட்ட தென்ஆப்பிரிக்கா.! கண்கலங்கிய தீபக் சாஹர்..!
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.
இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 287 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதனையடுத்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் கே.எல்.ராகுல் 9 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். இதையடுத்து தவனுடன் விராட் கோலி இணைந்து இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக ஆடிய ஷிகர் தவன் 61 ரன்னிலும், சூப்பராக ஆடிய விராட் கோலி 65 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்துவிட்டதால் தென் ஆப்ரிக்கா அணி இந்த போட்டியிலும் அபார வெற்றி பெறும் என கருதப்பட்ட நிலையில் தீபக் சாஹர் களமிறங்கி பேட்ஸ்மேன்களை விட மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதமும் அடித்து அசத்தினார்.
சிறப்பாக ஆடிய தீபக் சாஹரும் 54 எடுத்தநிலையில் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய வீரர்கள் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாததால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது. கடைசி கட்டத்தில் தான் அவுட் ஆன நிலையில், இந்திய அணி தோல்வியடைந்ததை தாங்கிக்கொள்ள முடியாத தீபக் சாகர் கண்கலங்கிவிட்டார்.