மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிக்ஸர் படேலாக மாறிய அக்ஸர் படேல்..!! முதலாவது வெற்றியை பதிவு செய்த மும்பை இந்தியன்ஸ்..!!
டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 16 வது லீக் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்றது.
கடந்த 2008 ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 16 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. டெல்லியில் நேற்றிரவு நடைபெற்ற 16 வது லீக் போட்டியில்டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து பிரித்திவி ஷா-டேவிட் வார்னர் ஜோடி களமிறங்கியது. பிரித்திவி ஷா (15 ) ஏமாற்றம் அளிக்க, அடுத்து களமிறங்கிய மனிஷ் பாண்டே வார்னருடன் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டார். ஸ்கோர் 76 ஐ எட்டிய போது மனிஷ் பாண்டே 26 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து யாஷ் துல் (2 ), ரோமன் பவெல் (4 ), லலித் யாதவ் (2 ) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 98 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து டெல்லி தவித்தது.
இதன் பின்னர் தனியாக போராடிய வார்னருடன் கைகோர்த்த அக்ஸர் படேல் சிக்ஸர் படேலாக மாறி பட்டையை கிளப்பினார். 25 பந்துகளை சந்தித்த அக்ஸர் படேல் 54 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தடுமாற்றத்துடன் விளையாடிய வார்னர் 51 ரன்கள் எடுத்தார். 19 வது ஓவரில் 4 விக்கெட்டுகளை பறி கொடுத்த டெல்லி அணி 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதனையடுத்து 173 ரன்கள் இலக்கை துரத்திய மும்பை அணிக்கு ரோஹித் சர்மா-இஷான் கிஷன் ஜோடி களமிறங்கியது. 6 ஓவர்களில் அதிரடியாக 62 ரன்கள் குவித்த இந்த ஜோடியில் இஷான் கிஷன் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய திலக் வர்மா 29 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, மறுமுனையில் ரோஹித் சர்மா அரைசம் விளாசினார்.
ரோஹித் சர்மா 65 (45) ரன்களில் ஆட்டமிழக்க, முதல் பந்தை தூக்கியடித்து பொறுப்பற்ற முறையில் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்தார். பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் மும்பை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 173 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றியை சுவைத்தது. கேமரூன் கிரீன் 17 ரன்னுடனும், டிம் டேவிட் 13 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 3 வது லீக் போட்டியில் ஆடிய மும்பைக்கு இது முதலாவது வெற்றியாகும். டெல்லி அணிக்கு 4வது தோல்வியாகும்.