மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாக்கு எண்ணிக்கையில் இதனை மறந்துட்டுமே..! சென்னை அணியை பின்னுக்கு தள்ளிய டெல்லி அணி.!
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றைய 29-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரப்சிம்ரன் சிங் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். பிரப்சிம்ரன் சிங் 16 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தநிலையில் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து வந்த கிறிஸ் கெய்ல் 13 ரன்களில் ரபாடா வீசிய பந்தில் போல்ட் ஆனார். நிதானமாக ஆடிய டேவிட் மலான் 26 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து போல்ட் ஆகி ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய மயங்க் அகர்வால் 58 பந்துகளில் 99 ரன்கள் எடுத்த நிலையில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 167 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துவக்க வீரர்கள் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். 17.4 ஓவர்களில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்தநிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இதுவரை ஆடிய 8 போட்டிகளில் 6 ஆட்டங்களில் வெற்றிபெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியது. முதல் இடத்தில் இருந்த சென்னை அணி இதுவரை ஆடிய 7 போட்டிகளில் 5 ஆட்டங்களில் வெற்றிபெற்று 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.