#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆஹா..!! என்னா அழகு..!! சஹால் மனைவியுடன் செமயா டான்ஸ் ஆடிய ஷிகர் தவான்..! வைரல் வீடியோ..
இந்திய கிரிக்கெட் வீரர் தவான் சஹால் மனைவியுடன் நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய ஒருநாள் போட்டியில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளியிப்படுத்தியிருந்த தவான் தற்போது ஐபில் போட்டிக்கு தயாராகிவருகிறது. இந்த மாதம் 9 ஆம் தேதி தொடங்கவும் முதல் ஐபில் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
இரண்டாவது போட்டியானது அதற்கு அடுத்த நாள் மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை - டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. டெல்லி அணிக்காக விளையாடிவரும் தவான் வரவிருக்கும் ஐபில் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
இந்நிலையில் தவான் சக வீரரான சஹால் அவரின் மனைவி தனஸ்ரீ வர்மாவுடன் செமயா நடனமாடிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. சஹால்-தனஸ்ரீ வர்மாவுக்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.