தவானின் செஞ்சுரிக்கு பின்னால் உள்ள ஐந்து மாத ரகசியம்! பாவம்யா அவரு!



Dhawan hard work and secret behinds the match against to Australia

இந்தியா, ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நேற்று முதலில் பேட் செய்த இந்திய அணி சிறப்பாக விளையாடி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 352 என்ற இமாலய இலக்கை எட்டியது.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய தவான் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் சிறப்பாக விளையாடி அணிக்கு வலு சேர்த்தனர். குறிப்பாக தவான் நேற்றைய ஆட்டத்தில் 117 ரன் அடித்தது இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்.

World cup 2019

நேற்றைய போட்டிக்கு முன்பு வரை தவான் சரியான பார்மில் இல்லை. இதற்கு முன்னர் தென்னாப்ரிக்காவுடன் நடைபெற்ற ஆட்டத்தில் கூட தவான் வந்த வேகத்தில் ஆட்டம் இழந்து சென்றது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

மேலும் இதற்கு முன்னர் நடந்த பல்வேறு போட்டிகளில் தவான் சிறப்பாக ஆட வில்லை.உலக்கோப்பை போட்டிக்கு தவானுக்கு பதிலாக வேறொரு இளம் வீரரை தேர்வு செய்யலாமா என அணி நிர்வாகம் யோசித்த வேளையில் நேற்றைய ஆட்டம் தவானுக்கு வழங்கப்பட இறுதி வாய்ப்பு என்றுகூட கூறலாம்.

World cup 2019

நேற்று தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளார் தவான். ஆனால், கடந்த 5 மாதங்களாக தவான் மோசமான பார்மில் இருந்தார். உடல் அளவில் மட்டுமில்லாமல் மன அளவிலும் அவர் நிறைய பிரச்சனையில் இருந்தாராம்.

தற்போது முறையான கவுன்சலிங், தீவிர பயிற்சிக்கு பிறகு தவான் மீண்டும் பாமிற்கு வந்துள்ளார். இனி வரும் ஆட்டங்களிலும் தவான் சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றிபெற செய்யவேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.